Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அரசு மருத்துவமனை ஓ.பி.சீட்டில் தமிழில் நோயாளியின் பெயர்: மருத்துவ கல்வி இயக்குநர் சங்குமணி பரிந்துரை

அரசு மருத்துவமனை ஓ.பி.சீட்டில் தமிழில் நோயாளியின் பெயர்: மருத்துவ கல்வி இயக்குநர் சங்குமணி பரிந்துரை

அரசு மருத்துவமனை ஓ.பி.சீட்டில் தமிழில் நோயாளியின் பெயர்: மருத்துவ கல்வி இயக்குநர் சங்குமணி பரிந்துரை

அரசு மருத்துவமனை ஓ.பி.சீட்டில் தமிழில் நோயாளியின் பெயர்: மருத்துவ கல்வி இயக்குநர் சங்குமணி பரிந்துரை

ADDED : ஜூன் 04, 2024 06:39 AM


Google News
Latest Tamil News
மதுரை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வரும் புறநோயாளிகளின் பெயரை ஓ.பி., சீட்டில் தமிழில் டைப் செய்ய பரிந்துரைக்கப்படும்,' என மதுரை அரசு மருத்துவமனையை ஆய்வு செய்ய வந்த மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் சங்குமணி தெரிவித்தார்.

இங்குள்ள மருந்தக வார்டில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகளை சரிபார்த்தார். அகச்சுரப்பியல் பிரிவுக்கு வரும் நோயாளிகளுக்கான தைராய்டு மாத்திரைகளை முழுமையாக பாட்டிலில் வழங்கவும் மாத்திரைக்கான காகிதப் பையில் உணவுக்கு முன்… உணவுக்கு பின்' என எழுதி தரவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது: புறநோயாளிகள் சிகிச்சைக்கு வரும் போது கம்ப்யூட்டரில் தரப்படும் ஓ.பி. சீட்டில் நோயாளியின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இனிமேல் தமிழில் டைப் செய்து வழங்க அறிவுறுத்தப்படும். விருதுநகர் அரசு மருத்துவமனையில் நான் டீனாக இருந்தபோது மருத்துவமனையில் புறநோயாளிகள் சீட்டு பதியும் இடத்திலும் உணவுச்சீட்டு வழங்கும் இடத்திலும் உள்ள பணியாளர்கள் மரியாதைக்குறைவாக நடத்துவதாக நோயாளிகள் புகார் தெரிவித்தனர்.

எனக்கு வந்த முதல் புகார் இது தான். நோயாளிகள், அவர்களது உறவினர்களுக்குரிய மரியாதை வழங்க வேண்டியது நமது கடமை. அனைத்து டீன்களும் ஓ.பி.சீட்டு, உணவுச்சீட்டு வழங்கும் இடத்திற்கு சென்று அந்த பணியாளர்கள் நோயாளிகளை மரியாதையுடன் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

துணை மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் சிவராஜ், மதுரை டீன் தர்மராஜ், ஆர்.எம்.ஓ. ஸ்ரீலதா, உதவி ஆர்.எம்.ஓ., சையது உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us