
மேலுார்: அம்பலகாரன்பட்டியில் வல்லடிகாரர் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.
இதில் வெள்ளலுார் நாட்டில் இருந்து 300 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். காளைகளை அடக்கியதில் 15 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று (மார்ச் 14 ) கிடா வெட்டி உச்சி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி அம்பாளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மார்ச் 15 ல் தேரோட்டம், மார்ச் 16 ல் மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறும்..