/உள்ளூர் செய்திகள்/மதுரை/ செல்லுார் ராஜூக்கு அமைச்சர் மூர்த்தி பதில் செல்லுார் ராஜூக்கு அமைச்சர் மூர்த்தி பதில்
செல்லுார் ராஜூக்கு அமைச்சர் மூர்த்தி பதில்
செல்லுார் ராஜூக்கு அமைச்சர் மூர்த்தி பதில்
செல்லுார் ராஜூக்கு அமைச்சர் மூர்த்தி பதில்
ADDED : மார் 12, 2025 01:19 AM
மதுரை; மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.20.72 கோடியில் முடிவுற்ற 115 திட்டப்பணிகளை அமைச்சர் மூர்த்தி நேற்று துவக்கி வைத்தார்.
சின்னமாங்குளம் இந்திரா நகரில் பகுதிநேர ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டு, திறக்காமல் உள்ளதாக பொதுமக்கள் கூறினர். அதை ஆய்வு செய்த அமைச்சர் கூட்டுறவு இணைப்பதிவாளரிடம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
அமைச்சர் கூறியதாவது: மும்மொழிக் கொள்கையில் தமிழர்கள் அநாகரிகமானவர்கள் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு பார்லிமென்டில் தமிழக எம்.பி.,க்கள் சரியான பதில் கொடுத்துள்ளனர். முதல்வர் ஸ்டாலினும் 'யார் அநாகரிகமானவர்கள்' என்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார். 'மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க., கோட்டை' என செல்லுார் ராஜூ கூறியுள்ளார். அதை பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு கூறினார்.