/உள்ளூர் செய்திகள்/மதுரை/ திருநகர் மெயின் ரோட்டில் மெகா சைஸ் பள்ளங்கள் திருநகர் மெயின் ரோட்டில் மெகா சைஸ் பள்ளங்கள்
திருநகர் மெயின் ரோட்டில் மெகா சைஸ் பள்ளங்கள்
திருநகர் மெயின் ரோட்டில் மெகா சைஸ் பள்ளங்கள்
திருநகர் மெயின் ரோட்டில் மெகா சைஸ் பள்ளங்கள்
ADDED : ஜூலை 23, 2024 05:39 AM

திருநகர்: மதுரை திருநகர் இரண்டாவது பஸ் ஸ்டாப் பகுதி மெயின் ரோட்டில் உள்ள பெரிய பள்ளங்களால் விபத்து அபாயம் உள்ளது.
அப்பகுதியில் ரோடு விரிவாக்கத்தில் வணிக வளாக பிரச்னையால் கழிவுநீர் கால்வாய் பணி பாதியில் நிற்கிறது. அதனால் 500 மீட்டருக்கு மேல் ரோடும் சீரமைக்கப்படாமல் கிடக்கிறது. அந்த ரோட்டின்மேல் ஜல்லி, கிரஷர்துாசி கலவை கொட்டி ஒருமாதத்திற்கும் மேலாகிறது.
அங்கு தார் ரோடு அமைக்கப்படாததால் துாசி பறக்கிறது. துாசி பறப்பதை தவிர்க்க லாரிமூலம் தண்ணீர் ஊற்றப்படுகிறது. அப்பகுதி முழுவதும் சிறு சிறு பள்ளங்களும், சில பெரிய பள்ளங்களும் உள்ளன.
இரவு நேரங்களில் டூவீலரில் செல்வோர் அருகே வந்ததும், பள்ளங்களை கண்டு விலகி செல்ல முற்படும்போது, விழுந்து காயம் அடைகின்றனர். அந்த பள்ளங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில், வாகனங்கள் வேகமாக செல்லும் பொழுது பாதசாரிகளுக்கு அபிேஷகம்நடக்கிறது. எனவே பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை தேவை.