ADDED : ஜூலை 01, 2024 04:17 AM
பேரையூர் : பேரையூர் கிளை அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம், மதுரை லட்சுமணா மருத்துவமனை சார்பில் பேரையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
ஓய்வூதிய சங்க நிர்வாகிகள் பெருமாள்ராஜா, அன்னக்குமார், தினகர்சாமி, சர்புதீன், ஜெயச்சந்திரன், கிருஷ்ணன், குருசாமி ஏற்பாடு செய்தனர். டாக்டர்கள் பாலச்சந்திரன், ரோஷினி முகாமில் சிகிச்சை அளித்தனர்.