மலேசியாவில் மதுரை மாணவர்கள் சாதனை
மலேசியாவில் மதுரை மாணவர்கள் சாதனை
மலேசியாவில் மதுரை மாணவர்கள் சாதனை
ADDED : ஜூலை 22, 2024 05:29 AM

மதுரை: மலேசியாவில் நடந்த டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை படைத்தனர்.
மலேசியா கோலாலம்பூரில் சர்வதேச ஸ்பீட் பவர் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் இந்தியா உட்பட 10 நாடுகளில் இருந்து 2500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பூம்சே, கியொருகி, ஸ்பீடு கிக்கிங் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.இதில் அமெச்சூர் மதுரை மாவட்ட விளையாட்டு டேக்வாண்டோ சங்கம் சார்பில் 14 போட்டியாளர்கள் பங்கேற்று 4 தங்கம், 7 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்கள் வென்றனர்.
பூம்சே பிரிவில் ஷெரின் ஜெகனரா, ஜெய சிம்ம விருமன், உதய கிருஷ்ணன், பிரகாஷ் குமார் தங்கமும், கீர்த்திவாசன், ரோஹித் பாலன், கிறிஸ்டியானோ அன்டன் ஜாய்சிங், கார்த்திக், ரகுராமன், வெள்ளியும், நிகில், நாராயணன், கார்த்திக் ஸ்ரீராம், விஜய் அருணாச்சலம் வெண்கல பதக்கமும் வென்றனர்.
கியொருகி பிரிவில் கார்த்திக் ஸ்ரீராம், நாராயணன் வெள்ளி பதக்கமும், ஷெரின் ஜெகனரா, ரோகித் பாலன், உதய கிருஷ்ணன்,ஜெய சிம்ம விருமன், நிகில், கீர்த்திவாசன், முத்து ஹரிஷ், கிறிஸ்டியானோ அன்டன் ஜாய்சிங் வெண்கல பதக்கமும் வென்றனர்.
வெற்றி பெற்றவர்களை போட்டி ஒருங்கிணைப்பாளர் தத்தோ கிராண்ட் மாஸ்டர் பாலா, டேக்வாண்டோ தலைமை பயிற்சியாளர் நாராயணன் பாராட்டினர்.