/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பணி முடிந்து ஏங்குது ரேஷன் கடை; பாதியில் தவிக்குது குடிநீர் தொட்டி அடிப்படை வசதி வேண்டும் அங்கயற்கண்ணி நகர் பணி முடிந்து ஏங்குது ரேஷன் கடை; பாதியில் தவிக்குது குடிநீர் தொட்டி அடிப்படை வசதி வேண்டும் அங்கயற்கண்ணி நகர்
பணி முடிந்து ஏங்குது ரேஷன் கடை; பாதியில் தவிக்குது குடிநீர் தொட்டி அடிப்படை வசதி வேண்டும் அங்கயற்கண்ணி நகர்
பணி முடிந்து ஏங்குது ரேஷன் கடை; பாதியில் தவிக்குது குடிநீர் தொட்டி அடிப்படை வசதி வேண்டும் அங்கயற்கண்ணி நகர்
பணி முடிந்து ஏங்குது ரேஷன் கடை; பாதியில் தவிக்குது குடிநீர் தொட்டி அடிப்படை வசதி வேண்டும் அங்கயற்கண்ணி நகர்
ADDED : ஜூன் 10, 2024 05:30 AM

வேடர்புளியங்குளம் : திருப்பரங்குன்றம் ஒன்றியம் வேடர்புளியங்குளம் அங்கயற்கண்ணி நகர் குடியிருப்போர் அடிப்படை வசதியின்றி தவித்து வருகின்றனர்.
இங்கு மூன்று முதன்மை தெருக்கள், கமலா நகர், ராகவேந்திரா நகர், கணபதி நகர், உதயா நகர், நேவி நகரில் இரு தெருக்கள், ஈஸ்வரி நகரில் 3 தெருக்கள், தனலட்சுமி நகரில் 4 குறுக்குத் தெருக்களில் 250 குடும்பங்கள் உள்ளன.
இப்பகுதி பிரச்னைகள் குறித்து குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் ராஜவேல், செயலாளர் சங்கர் குமார், பொருளாளர் வேல்முருகன், துணைத் தலைவர் முத்து, செயற்குழு உறுப்பினர்கள் வேல்முருகன், நிர்மலாதேவி கூறியதாவது:
வீணாகும் வரிப்பணம்
இப்பகுதிக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. பழுது ஏற்பட்டால் 10 நாட்களுக்கு தண்ணீர் வராது. வைகை கூட்டுக் குடிநீரை சேமிக்க கணபதி நகரில் மேல்நிலை தொட்டி கட்டும் பணிகள் தொடங்கி பாதியில் விடப்பட்டுள்ளது.
வெயில், மழையில் கட்டுமான கம்பிகள் துருப்பிடித்து, தோண்டிய குழிகள் மண் மூடிவிட்டன. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது.
இங்கு போர் வசதியுடன் 2 குடிநீர் தொட்டிகள் உபயோகமற்ற நிலையில் உள்ளன. அதை சீரமைக்க வேண்டும். எங்களுக்கான ரேஷன் கடை வேடர்புளியங்குளத்தில் உள்ளது. அவ்வப்போது பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இங்கு ரேஷன் கடை கட்டி பல மாதங்களாகியும் திறப்புவிழா காணாமல் உள்ளது.
20 நிமிடங்களுக்கு ஒரு பஸ்
சாக்கிலிப்பட்டி, மாவிலிப்பட்டி, தென்பழஞ்சியில் இருந்து பஸ்கள் காலையில் ஒரே நேரத்தில் வருகின்றன. சில குறிப்பிட்ட நேரங்களில் பஸ் கிடைக்காமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். 15-20 நிமிடங்களுக்கு ஒருமுறை சீரான இடைவெளியில் பஸ் இயக்க வேண்டும். மதிய வேளையில் பெரும்பாலும் பஸ் வருவதில்லை. இரவு 9:45 மணி வரை பஸ் இயக்க வேண்டும். கால்நடை மருத்துவமனை 2 கி.மீ., தொலைவில் தென்பழஞ்சியில் உள்ளது. அங்கு 2 மணி நேரமே டாக்டர் இருக்கிறார். மருந்துகளும் போதியளவு கையிருப்பில் இல்லை. குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திருவள்ளுவர் நகர் செல்ல வேண்டியுள்ளது.
இப்பகுதியில் சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, நுாலகம் அமைக்க வேண்டும்.
நாளுக்குநாள் இப்பகுதி விரிவாக்கம் அடைகிறது. நேவி நகரில் விளக்கு இன்றி இரவில் வெளியில்வர அஞ்சுகின்றனர். 6 மாதங்களுக்கு ஒருமுறை திருட்டு சம்பவம் நடக்கிறது. இங்கு கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க ஆலோசித்து வருகிறோம். குப்பையை அப்புறப்படுத்தாமல் எரிப்பதால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
மாநகராட்சிப் பகுதிகளில் பிடிக்கும் தெருநாய்களை இங்கு விட்டுச் செல்கின்றனர். நாய்கள் டூவீலர் முன் பாய்வதால் விபத்து ஏற்படுகிறது, என்றனர்.