ADDED : ஜூன் 17, 2024 12:57 AM

வாடிப்பட்டி: தேனுாரில் நிலவதி கருப்பணசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்றனர்.
இக்கோயிலில் ஜூன் 15ல் முதல் கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று காலை 3ம் கால யாக பூஜையை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. சுவாமி, நிலவதி அம்மன், பரிவார தெய்வங்களுக்கு ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை நிலவதி கருப்பண சுவாமி, நிலபதி அம்மன் சாமி பங்காளிகள், பெண்ணடி பிள்ளைகள், கிராமத்தினர் செய்திருந்தனர்.
* சமயநல்லுார் ஆர்.சி., தெரு நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 4ம் கால யாக பூஜையை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றினர். அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக வழிபாடுகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.