/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பணி நீக்கத்திற்கு எதிராக காதி ஊழியர் வழக்கு பணி நீக்கத்திற்கு எதிராக காதி ஊழியர் வழக்கு
பணி நீக்கத்திற்கு எதிராக காதி ஊழியர் வழக்கு
பணி நீக்கத்திற்கு எதிராக காதி ஊழியர் வழக்கு
பணி நீக்கத்திற்கு எதிராக காதி ஊழியர் வழக்கு
ADDED : ஜூன் 06, 2024 04:07 AM
மதுரை : மதுரை விளக்குத்துாண் கணேசன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரையில் கதர்துறை அலுவலகத்தில் முதல்நிலை எழுத்தராக பணிபுரிந்தேன். தணிக்கையில் குற்றச்சாட்டு என் மீது எதுவும் இல்லை. காரணமின்றி 1988 ல் சஸ்பெண்ட், 1999 ல் பணி நீக்கம் செய்யப்பட்டேன். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
தனிநீதிபதி,'பணி நீக்க உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அரசு புதிதாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என 2004ல் உத்தரவிட்டார். அதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது.
தனிநீதிபதியின் உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு 2008 ல் உறுதி செய்தது. தமிழக காதி கிராம தொழில்கள் வாரிய தலைவர் விசாரித்து நிராகரித்தார்.
அதை ரத்து செய்து சஸ்பெண்ட் மற்றும் பணி நீக்க காலத்திற்கு வட்டியுடன் பணப்பலன்கள் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா விசாரணையை ஒத்திவைத்தார்.