/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கருங்காலக்குடி புதர் மண்டிய சார் பதிவாளர் அலுவலகம் கருங்காலக்குடி புதர் மண்டிய சார் பதிவாளர் அலுவலகம்
கருங்காலக்குடி புதர் மண்டிய சார் பதிவாளர் அலுவலகம்
கருங்காலக்குடி புதர் மண்டிய சார் பதிவாளர் அலுவலகம்
கருங்காலக்குடி புதர் மண்டிய சார் பதிவாளர் அலுவலகம்
ADDED : ஜூன் 09, 2024 03:56 AM

கொட்டாம்பட்டி : கருங்காலக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பத்திர பதிவுக்கு வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்
கருங்காலக்குடியில் ரூ.57 லட்சத்தில் சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்பட்டு 2017 முதல் செயல்படுகிறது. இவ்வலுவலகத்தில் கொட்டாம்பட்டி, சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட 29 ஊராட்சிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் தினமும் பத்திர பதிவுக்கு வந்து செல்கின்றனர். அலுவலகத்திற்கு செல்லும் வழி புதர் மண்டி காடு போல் கிடக்கிறது.
பொது மக்கள் கூறியதாவது: மெயின் கேட்டை பயன்படுத்தாமல் புதர் மண்டி காணப்படுவதால் விஷப் பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இயற்கை உபாதை கழிக்கும் இடமாக வளாகம் மாறி வருவதால் சுகாதார கேடாக காணப்படுகிறது.
அலுவலத்திற்கு பக்கவாட்டு கேட் வழியாகத்தான் வந்து செல்கிறோம். காத்திருப்போர் அறையும் பூட்டிக் கிடப்பதால் வரண்டா மற்றும் திறந்த வெளியில் வெயிலில் காத்துக் கிடக்கிறோம். அலுவலகம் வரும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதியை உடனே செய்து தர வேண்டும் என்றனர்.