ADDED : ஜூலை 27, 2024 06:38 AM
மதுரை : கார்கில் போர் வெற்றிவிழா மதுரை அரசு சட்டக் கல்லுாரியில் நடந்தது.
முதல்வர் (பொறுப்பு) குமரன் தலைமை வகித்தார். உதவி பேராசிரியை தமிழ்மணி வரவேற்றார். நேதாஜி சுவாமிநாதன் பேசுகையில்,''கடுங்குளிரில் முப்படை வீரர்கள் பணிபுரிவதால் நாம் நிம்மதியாக வாழ்கிறோம். கார்கில் போரில் வெற்றி பெற்ற நமது ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றி வணங்குவோம்'' என்றார். உதவி பேராசிரியர் குபேந்திரன் நன்றி கூறினார்.