/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும் நீதிபதி ஸ்ரீமதி வேண்டுகோள் கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும் நீதிபதி ஸ்ரீமதி வேண்டுகோள்
கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும் நீதிபதி ஸ்ரீமதி வேண்டுகோள்
கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும் நீதிபதி ஸ்ரீமதி வேண்டுகோள்
கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும் நீதிபதி ஸ்ரீமதி வேண்டுகோள்
ADDED : ஜூலை 11, 2024 05:28 AM

மதுரை: ''ஒவ்வொருவரும் நமது கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும்'' என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி தெரிவித்தார்.
மதுரை சொக்கிகுளம் காஞ்சி ஸ்ரீ சங்கரமடத்தில் காமாட்சி அம்பாளுக்கு தங்க கவசம் சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. மதுரை காஞ்சி சங்கர மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ராதாகிருஷ்ணன் சாஸ்திரிகள் சிறப்பு தீபாராதனை செய்தார்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி பேசுகையில் ''உலகத்தில் நாம் வாழ அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக நமது கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும். அதை நாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்'' என்றார். மடத்தின் பொருளாளர் வெங்கட்ரமணி, ராமேஸ்வரம் சங்கர மடத்தின் மேலாளர் ஆடிட்டர் சுந்தர், மதுரை சத்குரு சங்கீத சமாஜம் செயலாளர் ராஜாராம், பொறியாளர் ஸ்ரீகுமார், ஸ்தபதி செல்வராஜ், தாம்பிராஸ் மாநிலத் துணைத் தலைவர் அமுதன், தொழிலதிபர் சங்கர் நாராயணன், மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு பங்கேற்றனர்.