/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சின்ன சின்ன விஷயம்தான்; சிறுநீரக நோய் பாதிப்பில் இருந்து விடுபட சின்ன சின்ன விஷயம்தான்; சிறுநீரக நோய் பாதிப்பில் இருந்து விடுபட
சின்ன சின்ன விஷயம்தான்; சிறுநீரக நோய் பாதிப்பில் இருந்து விடுபட
சின்ன சின்ன விஷயம்தான்; சிறுநீரக நோய் பாதிப்பில் இருந்து விடுபட
சின்ன சின்ன விஷயம்தான்; சிறுநீரக நோய் பாதிப்பில் இருந்து விடுபட
ADDED : மார் 12, 2025 01:20 AM
மதுரை; கிராமப்புறங்களில், ஆரம்ப நிலையிலேயே நாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பை கண்டறிவது முக்கியம் என உலக சிறுநீரக தினத்தையொட்டி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
சிறுநீரகவியல் துறைத்தலைவர் சம்பத்குமார், சிறுநீரகப்பாதையியல் துறைத்தலைவர் ரவிச்சந்திரன், மருத்துவ நிர்வாகி கண்ணன் கூறியதாவது:
கிராமப்புற மக்கள் தொகையில் 8 முதல் 19 சதவீதத்தினரிடையே காரணம் அறியப்படாத நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளதாக சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. நச்சுப் பொருட்கள், பூச்சிக்கொல்லி, மாசுபட்ட நீரை பயன்படுத்துவது, வெப்ப அழுத்தத்தால் சிறுநீரகத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் வயது வந்தோர் மக்கள் தொகையில் 15 சதவீத பேரிடம் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் வெளிப்படுகிறது.
நீரிழிவு, அதிக ரத்தஅழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு முறை, சிறுநீரக பிரச்னை, குடும்ப மரபு வரலாறு போன்ற காரணிகள் இந்நோய்க்கான காரணங்கள். இரவில் சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை அதிகரிப்பது அல்லது குறைவது, நுரைத்தல் அல்லது ரத்தம் கலந்திருப்பது போன்ற அறிகுறிகள் மூலம் உணரலாம். களைப்பு, பலவீனம், கணுக்கால், பாதம் அல்லது கால்களில் வீக்கம், குறைந்த பசியுணர்வையும் ஆரம்பகட்ட அறிகுறிகளாக சொல்லலாம்.
ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். குறைந்தது 7 மணி நேர உறக்கம், முறையான ஓய்வு எடுப்பது இதயம், சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றனர்.