Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கடன் வாங்கி திருப்பி செலுத்திய பிறகும் பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பி மிரட்டல்; கடன் செயலியை நம்ப வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை

கடன் வாங்கி திருப்பி செலுத்திய பிறகும் பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பி மிரட்டல்; கடன் செயலியை நம்ப வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை

கடன் வாங்கி திருப்பி செலுத்திய பிறகும் பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பி மிரட்டல்; கடன் செயலியை நம்ப வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை

கடன் வாங்கி திருப்பி செலுத்திய பிறகும் பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பி மிரட்டல்; கடன் செயலியை நம்ப வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை

ADDED : ஜூலை 30, 2024 06:29 AM


Google News
Latest Tamil News
மதுரை : மதுரையில் கடன் செயலி மூலம் ரூ.20 ஆயிரம் பெற்று திருப்பி செலுத்திய பிறகும் 'மார்பிங்' செய்து ஆபாச படம் அனுப்பி மிரட்டும் நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண், கடந்த மார்ச்சில் கடன் செயலி மூலம் ரூ.20 ஆயிரம் பெற்றார். அதை கடந்த மாதம் முழுமையாக செலுத்தி முடித்தார். இந்நிலையில் நேற்று காலை ராகுல் என்ற பெயரில் 92 341 6275462 என்ற எண்ணில் இருந்து வாட்ஸ் ஆப்பில் 'உங்கள் வங்கி கணக்கிற்கு ரூ.3 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது. உங்கள் கடனை உடனே திருப்பி செலுத்தாவிட்டால் உங்கள் ஆபாச படம் குடும்ப உறுப்பினர்களுக்கும், சமூகவலைத்தளங்களிலும் பரப்பப்படும்' என எச்சரிக்கப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் அப்பெண் புகார் செய்தார். விசாரணை நடக்கிறது.

நமது நிருபரிடம் அப்பெண் கூறியதாவது: நேற்று காலை எஸ்.எம்.எஸ்., ஒன்று வந்தது. அதில் இருந்த 'லிங்க்'கை தவறுதலாக அழுத்தினேன். உடனே சுதாரித்து வெளியே வந்துவிட்டேன். அடுத்த சில நிமிடங்களில் எனக்கு ரூ.3 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் தகவல் வந்தது. வங்கியில் விசாரித்தபோது இல்லை எனத்தெரிந்தது. இதனால் வாட்ஸ் ஆப் தகவலுக்கு எந்த பதிலும் நான் தெரிவிக்கவில்லை. இதைதொடர்ந்து என் முகத்தை வேறு ஒரு பெண் உடலோடு பொருத்தி 'மார்பிங்' செய்து எனக்கு அனுப்பினர். அதற்கு நான் எதுவும் பதில் தெரிவிக்காததால், அந்த படத்தை என் குடும்பத்தினருக்கும், சமூகவலைத்தளத்திலும் பரப்ப போவதாக மிரட்டுகின்றனர்.

கடந்த மார்ச்சில் நான் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கிய செயலியில் ஆதார் எண், போட்டோ உள்ளிட்ட விபரங்கள் பதிவிட்டிருந்தேன். அதிலிருந்துதான் என் அலைபேசி எண்ணை எடுத்து ஆபாச படத்தை அனுப்பி மிரட்டுவதாக கருதுகிறேன்.

அந்த செயலிக்கும், மிரட்டல் நபருக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசில் தெரிவித்துள்ளேன். இவ்வாறு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us