/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாநகராட்சி திட்டப் பணிகள்மேயர், கமிஷனர் ஆய்வு மாநகராட்சி திட்டப் பணிகள்மேயர், கமிஷனர் ஆய்வு
மாநகராட்சி திட்டப் பணிகள்மேயர், கமிஷனர் ஆய்வு
மாநகராட்சி திட்டப் பணிகள்மேயர், கமிஷனர் ஆய்வு
மாநகராட்சி திட்டப் பணிகள்மேயர், கமிஷனர் ஆய்வு
ADDED : ஜூலை 05, 2024 05:18 AM
மதுரை: மதுரையில் மாநகராட்சி சார்பில் நடந்து வரும் திட்டப் பணிகளை மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் ஆய்வு செய்தனர்.
மண்டலம் 4க்கு உட்பட்ட 41 வது வார்டு ஐராவதநல்லுார், கணபதி நகர், செல்வபுரம் மெயின் ரோடு, தெப்பக்குளம், எம்.ஜி.ஆர்., காலனி பகுதிகளில் ரோடுகள் அமைத்தல், மழைநீர் வடிகால் கட்டமைப்புகள், குடிநீர் தொட்டிகள் அமைத்தல், முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டத்திற்கான குழாய் பதிப்புப் பணிகள், கால்வாய்களில் தடுப்புச்சுவர் கட்டுதல், பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை நுாறு சதவீதம் நிறைவு செய்ய உத்தரவிட்டனர்.
கண்காணிப்பு பொறியாளர் முகம்மது சபியுல்லா, உதவி கமிஷனர் ஷாஜகான், செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், உதவி பொறியாளர் சூசை, சுகாதார அலுவலர் கோபால், சுகாதார ஆய்வாளர் சரவணக்குமார், கவுன்சிலர் செந்தாமரைக்கண்ணன் பங்கேற்றனர்.