/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வடக்கு தாலுகாவில் அதிகரிக்கும் மனுக்கள் வடக்கு தாலுகாவில் அதிகரிக்கும் மனுக்கள்
வடக்கு தாலுகாவில் அதிகரிக்கும் மனுக்கள்
வடக்கு தாலுகாவில் அதிகரிக்கும் மனுக்கள்
வடக்கு தாலுகாவில் அதிகரிக்கும் மனுக்கள்
ADDED : ஜூன் 19, 2024 04:45 AM
மதுரை, : மதுரை வடக்கு தாலுகாவில் நடந்து வரும் ஜமாபந்தியில் (வருவாய் தீர்வாயம்) நாளுக்கு நாள் மனுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மாவட்ட தாலுகா அலுவலகங்களில் நடக்கும் ஜமாபந்தியில் வழங்கப்படும் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண்கின்றனர்.
சப்டிவிஷன் தேவைப்படும் பட்டா மாறுதல் போன்றவற்றுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்கின்றனர். மதுரை வடக்கு தாலுகாவில் கலெக்டர் சங்கீதா தலைமையில், தாசில்தார் சிவக்குமார் முன்னிலையில் ஜமாபந்தி நடக்கிறது. இதில் மனுக்கள் கொடுக்க பொதுமக்கள் கூட்டம்தினமும் அலைமோதுகிறது. ஜமாபந்தி துவங்கிய நாளில் 60 மனுக்கள் என்ற அளவிலேயே இருந்தது. தொடர்ந்த நாட்களில்100, 120 என அதிகரித்து நேற்று அதிகபட்சமாக 320 மனுக்கள் வரை வந்தன.
கடைசி நாளான இன்று(ஜூன் 19) சாத்தமங்கலம் உள்வட்டம் (பிர்க்கா) பகுதியை சேர்ந்த கிராமங்களுக்கான மனுக்கள் பெறப்படுகின்றன.