/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் இயற்கை எரிவாயு பஸ்கள் துவக்கி வைப்பு மதுரையில் இயற்கை எரிவாயு பஸ்கள் துவக்கி வைப்பு
மதுரையில் இயற்கை எரிவாயு பஸ்கள் துவக்கி வைப்பு
மதுரையில் இயற்கை எரிவாயு பஸ்கள் துவக்கி வைப்பு
மதுரையில் இயற்கை எரிவாயு பஸ்கள் துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 23, 2024 05:31 AM
மதுரை: மதுரையில் இயற்கை எரிவாயு பஸ்கள் (கம்ப்ரஸ்டு நேச்சுரல் காஸ்) பஸ்கள் நேற்று துவக்கி வைக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவை இணைந்து மதுரையில் சி.என்.ஜி., பஸ்களை இயக்குகின்றன. இதற்கான துவக்க விழா நேற்று மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் நடந்தது.
போக்குவரத்துக் கழக கோட்ட மேலாண்மை இயக்குனர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஐ.ஓ.சி., நிர்வாக இயக்குனர் எஸ்.கே.ஜா, தெற்கு மண்டல தலைமை பொதுமேலாளர் ரானுராம், இயக்குனர் செந்தில்குமார் பங்கேற்றனர்.
ஒவ்வொரு போக்குவரத்துக் கழகத்திலும் சி.என்.ஜி., பஸ்களின் சோதனை ஓட்டம் கடந்த 2 வாரங்களாக நடந்தது. அதன் செயல்திறன் நம்பிக்கை அளிப்பதாகவும், ஊக்கமளிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போதுள்ள டீசல் இன்ஜின்களை சி.என்.ஜி. பஸ்களாக மாற்றுவதன் மூலம் தமிழக அரசின் கார்பன் உமிழாத நிலையை அடையும் முக்கிய படியாக உள்ளது.
இதுகுறித்து துணை மேலாளர் யுவராஜிடம் கேட்டபோது, டீசலை விட இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவது பல வழிகளில் நன்மையுள்ளதாக இருக்கிறது. சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாது என்பதுடன், விலையும் டீசலைவிட குறைவு. லிட்டருக்கு கிலோ மீட்டரும் அதிகம் கிடைக்கும்.
பயண அனுபவமும் சுகமாக இருக்கும். தற்போது மதுரையில் இருந்து சேலம், ராமநாதபுரம் என 2 நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன'' என்றார்.
ஐ.ஓ.சி., அதிகாரிகள் கூறுகையில், நகர எரிவாயு திட்டத்தின் ஒருபகுதியாக வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை வழங்கும் பணியில் ஐ.ஓ.சி., ஈடுபட்டுள்ளது. இத்திட்டத்தை வரும் ஆகஸ்டில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்'' என்றனர்.