/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டசக்தி மண்டப பணி துவக்கம்; உபயதாரர்கள் மூலம் 4 கோபுரங்களும் புதுப்பிப்பு மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டசக்தி மண்டப பணி துவக்கம்; உபயதாரர்கள் மூலம் 4 கோபுரங்களும் புதுப்பிப்பு
மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டசக்தி மண்டப பணி துவக்கம்; உபயதாரர்கள் மூலம் 4 கோபுரங்களும் புதுப்பிப்பு
மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டசக்தி மண்டப பணி துவக்கம்; உபயதாரர்கள் மூலம் 4 கோபுரங்களும் புதுப்பிப்பு
மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டசக்தி மண்டப பணி துவக்கம்; உபயதாரர்கள் மூலம் 4 கோபுரங்களும் புதுப்பிப்பு
ADDED : ஜூலை 02, 2024 06:19 AM

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிேஷக திருப்பணிகளின் ஒரு பகுதியாக கீழச் சித்திரை வீதியில் இருந்து அம்மன் சன்னதிக்கு செல்லும் அஷ்டசக்தி மண்டபத்தை புதுப்பிக்கும் பணி நேற்று துவங்கியது. 4 கோபுரங்களையும் உபயதாரர்கள் மூலம் புதுப்பிக்கும் பணியும் துவங்க உள்ளது.
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிேஷகம் 2009ல் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிேஷகம் நடத்த வேண்டும். இதன்படி 2022ல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 2018 பிப்.,2ல் நடந்த பயங்கர தீ விபத்தில் கோயிலின் வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் சிதைந்தது. இதன் சீரமைப்பு பணி தாமதம் ஆனதால் கும்பாபிேஷகம் நடத்த முடியவில்லை.
இதைதொடர்ந்து 'ரூ.18 கோடியில் வீரவசந்தராயர் மண்டபம் சீரமைக்கப்படும். ரூ.25 கோடியில் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கேற்ப கடந்தாண்டு செப்.,ல் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து வருகின்றன. 4 கோபுரங்களும் உபயதாரர்கள் மூலம் புதுப்பிக்கப்படுகிறது. மதுரையின் பிரபல தொழிலதிபர், சென்னை தொழிலதிபர், மலேசியா முன்னாள் அமைச்சர், மதுரையை பூர்வீகமாக கொண்ட நிறுவனத்தினர் ஒவ்வொரு கோபுரத்திற்கும் பொறுப்பேற்று உள்ளனர்.
இதில் கிழக்கு, வடக்கு, மேற்கு 9 நிலைகளை கொண்ட கோபுரங்களை சீரமைக்க தலா ரூ.1.20 கோடியும், தெற்கு கோபுரத்திற்கு ரூ.1.30 கோடியும் மதிப்பிடப்பட்டுள்ளது. தவிர மொத்தம் 21 வகையான திருப்பணிகளை உபயதாரர்கள் மூலம் செய்ய ரூ.7.55 கோடிக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. நேற்று நடந்த அஷ்டசக்தி மண்டப திருப்பணிக்கான பூஜையில் அறங்காவலர்கள், இணைகமிஷனர் கிருஷ்ணன் பங்கேற்றனர்.
4 ஆண்டுகளுக்கு பின் அபிேஷகம்
இக்கோயிலில் பள்ளியறை பூஜையின்போது சுவாமியிடம் இருந்து கங்கை தேவி விலகி நீர்நிலையில் ஐக்கியமாவதாக ஐதீகம். மறுநாள் பலி பீடத்தில் நீரால் அபிேஷகம் செய்யும் போது மீண்டும் சுவாமியிடம் கங்கை தேவி ஐக்கியமாவார். இதற்காக தினமும் வைகையாற்றில் இருந்து வெள்ளி குடங்களில் நீர் எடுத்து யானை மீது கொண்டு வரப்பட்டு அபிேஷகம் செய்யப்பட்டது.
நாளடைவில் இந்நடைமுறை மறைந்து போனது. 2003ல் மீண்டும் அபிேஷகம் செய்வதற்காக வைகையாற்றில் கிணறு உருவாக்கப்பட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டது.கொரோனா ஊரடங்கால்கோயில் கிணற்றில் இருந்து அபிேஷகத்திற்கு நீர் எடுக்கப்பட்டது.இதுகுறித்து தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து நேற்று முதல் மீண்டும் வைகையாற்றில் இருந்து அபிேஷகத்திற்காக தண்ணீர் எடுக்கப்பட்டது.