/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நான்கே மாதங்களில் பள்ளமாகி பல்லைக் காட்டிய ரோடால் அவதி நான்கே மாதங்களில் பள்ளமாகி பல்லைக் காட்டிய ரோடால் அவதி
நான்கே மாதங்களில் பள்ளமாகி பல்லைக் காட்டிய ரோடால் அவதி
நான்கே மாதங்களில் பள்ளமாகி பல்லைக் காட்டிய ரோடால் அவதி
நான்கே மாதங்களில் பள்ளமாகி பல்லைக் காட்டிய ரோடால் அவதி
ADDED : ஜூலை 30, 2024 02:04 AM

மேலுார்: கருங்காலக்குடி நான்கு வழிச்சாலையில் புதிய பாலத்தின் மீது அமைத்த ரோடு, நான்கே மாதங்களில் பள்ளமானதால் பாதுகாப்பான போக்குவரத்து கேள்விக்குறியாகி வருகிறது.
கருங்காலக்குடியில் நான்கு வழிச்சாலையின் ஒரு புறம் 15 கிராமங்களும், மறுபுறம் பள்ளி, அரசு மற்றும் கால்நடை மருத்துவமனைகளும் உள்ளன. மக்கள் தங்களின் தேவைகளுக்காக நான்கு வழிச்சாலையை கடக்க முயலும் போது நுாற்றுக்கும் மேற்பட்டோர் விபத்தில் இறந்துள்ளனர்.
அதனால் பாலம் கட்ட துவங்கி 3 ஆண்டுகள் ஆன நிலையில் லோக்சபா தேர்தலுக்கு முன் அவசரஅவசரமாக பாலம் திறக்கப்பட்டது.
நான்கே மாதத்தில் பாலத்தின் மீது அமைத்த ரோட்டில் பள்ளம் ஏற்படவே ஒட்டுப் போட்டு பள்ளத்தை மூடினர். தற்போது மீண்டும் பள்ளமாகிவிட்டது.
வாகன ஓட்டிகள் கூறியதாவது:
ரூ.19 கோடியில் புதிய பாலம் கட்டப்பட்டது. அதன் மீது அமைத்த ரோடு. நான்கே மாதங்களில் பள்ளமானது. செய்தி வெளியானதால் பள்ளத்தை ஒட்டுப் போட்டு மூடினர்.
தரமற்ற பணியால் ஒட்டு மீண்டும் பெயர்ந்து பள்ளமாகிவிட்டது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகி, ரோட்டின் தரம் கேள்விக்குறியாகி உள்ளது. மீண்டும் தரமான ரோடு அமைக்கவேண்டும் என்றனர்.