/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆஸ்திரேலிய பட்டாணிக்கு இறக்குமதி; உளுந்துக்கு மானியம் அமைச்சரிடம் வியாபாரிகள் கோரிக்கை ஆஸ்திரேலிய பட்டாணிக்கு இறக்குமதி; உளுந்துக்கு மானியம் அமைச்சரிடம் வியாபாரிகள் கோரிக்கை
ஆஸ்திரேலிய பட்டாணிக்கு இறக்குமதி; உளுந்துக்கு மானியம் அமைச்சரிடம் வியாபாரிகள் கோரிக்கை
ஆஸ்திரேலிய பட்டாணிக்கு இறக்குமதி; உளுந்துக்கு மானியம் அமைச்சரிடம் வியாபாரிகள் கோரிக்கை
ஆஸ்திரேலிய பட்டாணிக்கு இறக்குமதி; உளுந்துக்கு மானியம் அமைச்சரிடம் வியாபாரிகள் கோரிக்கை
ADDED : ஜூன் 08, 2024 06:12 AM
மதுரை : ஆஸ்திரேலிய பட்டாணிக்கு இறக்குமதி, உளுந்துக்கு மானியம் வழங்க வேண்டுமென மதுரையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம், அப்பளம் வடகம் மோர் வத்தல் தயாரிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
தலைவர் வேல்சங்கர், கவுரவ ஆலோசகர் ஜெயபிரகாசம், கவுரவ செயலாளர் சாய் சுப்ரமணியம், அப்பளம் சங்கத் தலைவர் திருமுருகன் ஆகியோர் கூறியதாவது:
38 ஆண்டுகளாக வெளிநாடுகளில் இருந்து பட்டாணி இறக்குமதி செய்யப்பட்டதை நம்பி துாத்துக்குடி, விருதுநகரில் பட்டாணியை உடைத்து பருப்பு, மாவு தயாரிக்கும் நிறுவனங்கள் துவங்கப்பட்டன. ஐந்தாண்டுகளாக இறக்குமதி தடையால் நிறுவனங்கள் முடங்கின. கடந்த டிச.,ல் கனடா, திபெத்தில் இருந்து பட்டாணி இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இந்த பட்டாணியை விட சுவையானது ஆஸ்திரேலியன் கஸ்பா பட்டாணி. துவரம்பருப்பு, கொண்டைக்கடலைக்கு மாற்று உணவாக உள்ளது. இதை இறக்குமதி செய்தால் மீண்டும் பருப்பு உடைக்கும் நிறுவனங்கள் இயங்கும்.
ஒரு லட்சம் டன் அளவுக்கு தமிழக துறைமுகங்கள் வழியாக இறக்குமதி செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
மேலும் துவரம் பருப்பின் விலை கிலோ ரூ.180 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு மாற்றாக இங்கு விளையும் சிவப்பு மசூர் பருப்பை கிலோ ரூ.72க்கு வாங்கி ரேஷனில் விற்றால் அரசுக்கு செலவு குறையும்.
தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.1200 கோடிக்கு வெளிநாடுகளுக்கு அப்பளம் ஏற்றுமதியாகிறது. மூலப்பொருளான உளுந்தம் பருப்பின் விலை கடந்தாண்டு கிலோ ரூ.80ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.130 ஆக அதிகரித்துள்ளது.
மூலப்பொருளின் விலை அதிகரிப்பால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை. பதுக்கல்காரர்களின் செயற்கை விலையேற்றத்தை கட்டுப்படுத்த அப்பள தயாரிப்பாளர்களுக்கு மானிய விலையில் மத்திய அரசு உளுந்தம்பருப்பு வழங்க வேண்டும் என்றனர்.