/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பொறுப்புக்கு வந்து விட்டால் பண்போடு நடக்க வேண்டும் பொறுப்புக்கு வந்து விட்டால் பண்போடு நடக்க வேண்டும்
பொறுப்புக்கு வந்து விட்டால் பண்போடு நடக்க வேண்டும்
பொறுப்புக்கு வந்து விட்டால் பண்போடு நடக்க வேண்டும்
பொறுப்புக்கு வந்து விட்டால் பண்போடு நடக்க வேண்டும்
ADDED : ஜூன் 04, 2024 06:31 AM
மதுரை : மதுரை தியாகராஜர் கல்லூரி மற்றும் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் கல்லுாரி முன்னாள் தலைவர் கருமுத்து கண்ணன் நினைவாக ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமனின் 'கம்பராமாயண தொடர் சொற்பொழிவு' கல்லூரியில் நடக்கிறது.
'இரண்டு வரம்' என்ற தலைப்பில் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: நாம் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுத் தருவது ராமாயணம். நாம் பிறரிடம் எப்போதும் எதையும் எதிர்பார்க்கக் கூடாது.
ஆண்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம். பெண்கள் அதனை காட்டிக் கொள்ள மாட்டார்கள். எப்போதும் நாம் சொல்வதை பிறர் எதிர்பார்க்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. இச்சமுதாயத்தின் சொத்து ராமாயணம். இவ்வுலகில் யாரையும் நிர்பந்திக்க கூடாது. அப்படி முயற்சித்தால் தோற்றுப் போகும் நிலை வந்துவிடும்.
யாரிடத்திலும் சட்டம் நியாயம் செல்லாது. பிரியத்துடன் அன்புடன் சொன்னால்தான் அது வெல்லும். உலகத்தில் எங்கு பாராட்டு பெறுவதை விட சிதம்பரத்தில் பாராட்டு வாங்கினால் தான் அது சிறப்பாகும். பொறுப்பு, பதவிக்கு வந்து விட்டால் பண்புடன் நடப்பது அவசியம்.
கைகேயி இல்லை என்றால் ராமாயணம் இல்லை. சகுனி இல்லை என்றால் மகாபாரதம் இல்லை. உலகத்தில் பொல்லாதவர்கள் இருந்தாலே கஷ்டம் தான். யாராவது ஏதாவது சொன்னால் அது நன்மை பயக்குமா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும். எந்த ஒரு காரியத்தையும் பதட்டத்துடன் செய்யக்கூடாது. குரு ஒன்றை சொன்னால் அதை பின்பற்ற வேண்டும். தாய் தந்தை சொன்னாலும் அதை வேத வாக்காக நினைக்க வேண்டும் என்றார்.
இச்சொற்பொழிவு ஜூன் 16 வரை கல்லூரியில் தினமும் மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது. ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்துள்ளார்.