Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தொழிலாளி கொலை வழக்கில் கைதுஇன்ஸ்பெக்டர் ஜாமின் மனு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு

தொழிலாளி கொலை வழக்கில் கைதுஇன்ஸ்பெக்டர் ஜாமின் மனு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு

தொழிலாளி கொலை வழக்கில் கைதுஇன்ஸ்பெக்டர் ஜாமின் மனு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு

தொழிலாளி கொலை வழக்கில் கைதுஇன்ஸ்பெக்டர் ஜாமின் மனு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு

ADDED : ஜூன் 19, 2024 04:46 AM


Google News
மதுரை, : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த கட்டட தொழிலாளி ராமர் 60, கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் சத்திய ஷீலாவின் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

ஸ்ரீவில்லிபுத்துார் கட்டட தொழிலாளி ராமர் அப்பகுதி முத்துமாரியம்மன் கோயில் விழாவிற்கு மே 21 சென்றார். அங்கு சிங்கம் சிலை வைப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராமரை சிலர் தாக்கினர். காயமடைந்த அவர் இறந்தார். சிலர் மீது ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர்.

இவ்வழக்கில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேட்டுப்பட்டியை சேர்ந்த சத்திய ஷீலாவை போலீசார் கைது செய்தனர்.

அவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். இதுபோல இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்துார் குறுக்கபட்டி ஜெயலட்சுமியும் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி பி.புகழேந்தி: சத்திய ஷீலா மற்றொரு வழக்கில் தொடர்புடையவர் எனக்கூறி அரசு தரப்பு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இச்சூழலில் அவருக்கு ஜாமின் அனுமதிக்க விரும்பவில்லை. அவர் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

ஜெயலட்சுமிக்கு ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. அவர் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை தினமும் போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us