/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்று உயர்நீதிமன்றக் கிளை ஆண்டுவிழா: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பங்கேற்பு இன்று உயர்நீதிமன்றக் கிளை ஆண்டுவிழா: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பங்கேற்பு
இன்று உயர்நீதிமன்றக் கிளை ஆண்டுவிழா: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பங்கேற்பு
இன்று உயர்நீதிமன்றக் கிளை ஆண்டுவிழா: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பங்கேற்பு
இன்று உயர்நீதிமன்றக் கிளை ஆண்டுவிழா: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பங்கேற்பு
ADDED : ஜூலை 20, 2024 01:19 AM

மதுரை : மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று (ஜூலை 20) நடைபெறும் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் 20 வது ஆண்டு நிறைவு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பங்கேற்கிறார்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை 2004 ஜூலை 24 ல் துவக்கப்பட்டது. இதன் 20 வது ஆண்டு நிறைவு விழா இன்று காலை 9:30 மணிக்கு மதுரையில் நடக்கிறது. பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் வரவேற்கிறார். விழாவை துவக்கி வைத்து 20 ஆண்டை குறிக்கும் நினைவுத் துாணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் திறந்து வைக்கிறார். 'சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு' புதிய பெயர் பலகையை உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் திறந்து வைக்கிறார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், கே.வி.விஸ்வநாதன் பங்கேற்கின்றனர். உயர்நீதிமன்ற கிளை நிர்வாக நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் நன்றி கூறுகிறார்.
வட, தென் மாவட்டங்களுக்குரிய தலா 100, இ-சேவா கேந்திராக்கள் துவக்க விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், பி.ஆர்.கவாய், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஆர்.சுப்பிரமணியன், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராமன் பங்கேற்கின்றனர்.