/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆசிரியர்கள் நியமன தேர்வு உயர்நீதிமன்றம் தடை ஆசிரியர்கள் நியமன தேர்வு உயர்நீதிமன்றம் தடை
ஆசிரியர்கள் நியமன தேர்வு உயர்நீதிமன்றம் தடை
ஆசிரியர்கள் நியமன தேர்வு உயர்நீதிமன்றம் தடை
ஆசிரியர்கள் நியமன தேர்வு உயர்நீதிமன்றம் தடை
ADDED : ஜூன் 06, 2024 04:04 AM
மதுரை, : பட்டதாரி ஆசிரியர் நியமன தேர்வு இறுதி விடைகள் அடிப்படையில் மேல்நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஜனனி தாக்கல் செய்த மனு:
பி.ஏ., பி.எட்., முடித்துள்ளேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமன தேர்விற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) 2023 அக்.25ல் வெளியிட்டது. விண்ணப்பித்தேன். எழுத்துத் தேர்வு பிப்.4ல் நடந்தது. தற்காலிக (கீ) விடைகளை டி.ஆர்.பி.,வெளியிட்டது. அதில் சில தவறான பதில்கள் இடம் பெற்றன. ஆட்சேபனை தெரிவித்தோம். பரிசீலிக்கவில்லை. இறுதி (கீ) விடைகளை வெளியிட்டது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தகுதியானவர்கள் அழைக்கப்பட்டனர். குழு அமைத்து இறுதி விடைகளை ஆய்வு செய்ய வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும். தேர்வானோரின் இறுதி பட்டியல் வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா: இறுதி விடைகள் அடிப்படையில் மேல்நடவடிக்கை எடுக்க 2 வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. டி.ஆர்.பி.,தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.