/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஜி.எஸ்.டி., வரி விதிப்பில் வெவ்வேறு நடைமுறைகளை கையாளக்கூடாது: வர்த்தகர்கள் வலியுறுத்தல் ஜி.எஸ்.டி., வரி விதிப்பில் வெவ்வேறு நடைமுறைகளை கையாளக்கூடாது: வர்த்தகர்கள் வலியுறுத்தல்
ஜி.எஸ்.டி., வரி விதிப்பில் வெவ்வேறு நடைமுறைகளை கையாளக்கூடாது: வர்த்தகர்கள் வலியுறுத்தல்
ஜி.எஸ்.டி., வரி விதிப்பில் வெவ்வேறு நடைமுறைகளை கையாளக்கூடாது: வர்த்தகர்கள் வலியுறுத்தல்
ஜி.எஸ்.டி., வரி விதிப்பில் வெவ்வேறு நடைமுறைகளை கையாளக்கூடாது: வர்த்தகர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 25, 2024 06:11 AM
மதுரை : 'ஜி.எஸ்.டி. குழு கூட்டத்தின் பரிந்துரைகள் வரி செலுத்துவோருக்கு போதுமானதாக இல்லை. ஜி.எஸ்.டி., வரி விதிப்பில் வெவ்வேறு நடைமுறைகளை கையாளக்கூடாது' என மதுரை வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ரத்தினவேலு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: 53வது ஜி.எஸ்.டி. குழுக் கூட்டத்தின் பரிந்துரைகள் வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லை. ஜி.எஸ்.டி., வரிச்சட்ட விதிகளின் குழப்பமான பிரிவுகள், நுாற்றுக்கணக்கான அறிவிப்பு, சுற்றறிக்கைகள் குறித்து சட்ட அமலாக்க அதிகாரிகள், துறை நிபுணர்களே விளக்கம் அளிக்க முடியாத நிலையில் வரிசெலுத்துவோர் பல நடைமுறை தவறுகளை செய்துவிட்டனர். எனவே சட்ட அமலாக்கத்திலிருந்து 5 ஆண்டுகள் அதாவது 2022 மார்ச் 31 வரை அபராதமோ, வட்டியோ விதிக்கக் கூடாது என வலியுறுத்தி வந்தோம்.
முதல் மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் அபராதம், வட்டி விதிக்கப்படாது என ஜி.எஸ்.டி. 53வது குழு பரிந்துரை செய்துள்ளது. இச்சலுகை போதுமானதல்ல. கொரோனா தொற்றால் வணிகம் பாதிக்கப்பட்ட 2020 -- 21 மற்றும் 2021 -- 22ம் ஆண்டுக்கும் சலுகை நீட்டிக்கவேண்டும்.
மத்திய ஜி.எஸ்.டி. வரிச் சட்டத்தின் கீழ் வரி செலுத்துவோரில் 1.96 சதவீதம் பேருக்குத் தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். ஆனால் மாநில ஜி.எஸ்.டி வரிச் சட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் வணிக நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
அவற்றில் பெரும்பாலானவை தேவையற்றது என்று நிரூபிக்க நிறைய செலவு செய்ய நேரிடுகிறது. தேசிய அளவிலான ஜி.எஸ்.டி. வரிச் சட்டத்தின் கீழ் மத்திய, மாநில வரி விதிப்பு அதிகாரிகள் வெவ்வேறான நடைமுறைகளை கையாளக்கூடாது. இதை ஜி.எஸ்.டி. குழு உறுதிப்படுத்த வேண்டும். தொழில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகளை ஜி.எஸ்.டி உயரதிகாரிகளுடன் இணைத்து கூட்டம் நடத்தினால் தான் ஜி.எஸ்.டி. வரி வீதங்களை மாற்றியமைக்க முடியும் என்றார்.