/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விதை கிராமங்களை உருவாக்க அரசு முன்வர வேண்டும் * பாரதிய கிசான் சங்கம் தீர்மானம் விதை கிராமங்களை உருவாக்க அரசு முன்வர வேண்டும் * பாரதிய கிசான் சங்கம் தீர்மானம்
விதை கிராமங்களை உருவாக்க அரசு முன்வர வேண்டும் * பாரதிய கிசான் சங்கம் தீர்மானம்
விதை கிராமங்களை உருவாக்க அரசு முன்வர வேண்டும் * பாரதிய கிசான் சங்கம் தீர்மானம்
விதை கிராமங்களை உருவாக்க அரசு முன்வர வேண்டும் * பாரதிய கிசான் சங்கம் தீர்மானம்
ADDED : ஜூலை 18, 2024 10:51 PM
மதுரை:விதை கிராமங்களை உருவாக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என தமிழ்நாடு பாரதிய கிசான் சங்கம் சார்பில் நடந்த வேளாண்மையில் விதைக் கொள்கை குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சியில் நடந்த கூட்டத்தில் சங்க தேசிய துணைத்தலைவர் பெருமாள், மாநில தலைவர் பாண்டியன், செயலாளர் வீரசேகரன், பொதுச் செயலாளர் சீனிவாசன், அமைப்பாளர் குமார், துணைத்தலைவர் பார்த்தசாரதி, செயற்குழு உறுப்பினர் வைத்தியநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். அவர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் மொத்தமுள்ள 49 லட்சம் எக்டேர் நிலப்பரப்பில் 20 லட்சம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு 80 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. நமது உற்பத்தி திறன் ஒரு எக்டேருக்கு 4000 கிலோ மட்டுமே. தமிழகத்தில் 73 ஆயிரத்து 498 எக்டேரில் விதைப் பண்ணைகள் மூலம் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 648 டன் விதைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இது மொத்த விதைத்தேவையில் 20 சதவீதம் மட்டுமே. நிரந்தர வேளாண்மைக்கும் உயர் விளைச்சல் மற்றும் உற்பத்தி திறன் அதிகரிப்பிற்கு அடிப்படைத் தேவை தரமான விதைகளே. அதற்கு விதைப் பண்ணைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
விதை கிராமங்கள் அமைத்து பருவத்திற்கு ஏற்ப தேவையான விதை ரகங்களை அந்த கிராமத்திலேயே உற்பத்தி செய்து அரசு ஏஜன்சிகள் மூலம் விநியோகம் செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் பயிர்க் கடன்களில் விதைப்பகுதியை ரொக்கமாக அன்றி விதையாக மட்டுமே கொடுக்க வேண்டும். கிராம கூட்டுறவு சங்கங்கள் வேளாண்மைத்துறை இணைந்து கிராமங்களில் விதைப்பண்ணை அமைக்க அரசு நிதி, மானியம் வழங்கவேண்டும். மாதந்தோறும் நடக்கும் விவசாய குறைதீர் கூட்டத்தில் விதைகள் பற்றிய ஆய்வு நடத்தப்பட வேண்டும்.
இவற்றை தீர்மானமாக நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியுள்ளோம் என்றனர்.