ADDED : ஜூலை 05, 2024 05:09 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி வேளாண், தோட்டக்கலைத்துறை சார்பில் வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை (அட்மா) திட்டத்தில், தேர்ந்தெடுத்த சீமானுாத்தில், காரீப் விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது. உதவி இயக்குநர் உதயகுமார், தோட்டக்கலைத் துணை அலுவலர் கோவிந்தசாமி, துணை வேளாண் அலுலவர் புவனேந்திரன், கிருஷ்ணா கல்லுாரி பேராசிரியர் கவிபிரியா, வேளாண் பொறியியல் துறை ஜெகதீசன் காரீப் பருவ பயிர்களுக்கு மானியங்கள், பயிர்பாதுகாப்பு பயிற்சி வழங்கினர்.
அட்மா தொழில்நுட்ப மேலாளர் ஜோதிலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பாண்டியராஜன், ஜெயக்குமார், அட்மா உதவி மேலாளர் ராஜேந்திரன், ராஜகோபாலன் செய்திருந்தனர்.