ADDED : ஜூன் 28, 2024 12:00 AM
மதுரை : மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் திவாகர் 30.
சமீபத்தில் திருட்டு வழக்கில் கீரைத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். நேற்றுமுன்தினம் இவ்வழக்கின் விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகிவிட்டு சிறைக்கு திரும்பினார். இவர் கஞ்சா வைத்திருந்ததாக கண்காணிப்பாளர் சதீஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. இவர் தங்கிய அறையின் கழிப்பறை அருகே மறைத்து வைத்திருந்த 9 கிராம் கஞ்சாவை காவலர்கள் பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் இருந்து வரும்போது ஆசன வாயில் மறைத்து எடுத்து வந்து பதுக்கியது தெரிந்தது.