ADDED : ஆக 02, 2024 05:04 AM
சோழவந்தான: சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லுாரில் ஜி.எச்.சி.எல்.,பவுண்டேஷன் மற்றும் பெட்கிராட் தொண்டு நிறுவனம் சார்பில் கிராமப்புற பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி துவக்க விழா நடந்தது.
ஊராட்சித் தலைவர் சகுபர் சாதிக் தலைமை வகித்தார். பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம், தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள் ரூபி முன்னிலை வகித்தனர். பயிற்சி பெறும் அனைவருக்கும் இலவச உபகரணங்களை பவுண்டேஷன் நிதி பங்களிப்பு அலுவலர் சுஜின் வழங்கினார். பயிற்சியாளர் விஜயவள்ளி நன்றி கூறினார்.