ADDED : ஜூன் 07, 2024 06:24 AM
மேலுார்: சேக்கிபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்ஹிந்து முன்னணி, அகில பாரத ஐயப்பா சேவா சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் நாளை (ஜூன் 8) இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது.
காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் இம்முகாமில் விழித்திரை, கண் நீர் அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள்குறித்து பரிசோதிக்கப்படும். சிகிச்சை பெற விரும்புவர்கள் முகவரி சான்றுடன் வரலாம் என ஹிந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் செந்தில்மூர்த்தி தெரிவித்தார்.