ADDED : ஜூன் 06, 2024 05:35 AM
மதுரை, : மதுரை புதுார் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் நான்கு வித இலவச தொழிற்பயிற்சி ஜூலை முதல் அளிக்கப்படுகிறது.
ஸ்மார்ட் போன் ஹார்டுவேர் பயிற்சி, சோலார் பேனல் இன்ஸ்டலேஷன் பயிற்சி, கம்ப்யூட்டர் ஹார்டுவேர், சி.சி.டி.வி., கேமரா குறித்த தியரி, செய்முறை பயிற்சிகள் தனித்தனியாக நடத்தப்படும். குறைந்தது 8ம் வகுப்புக்கு மேல் படித்த 40 வயதுக்குட்பட்ட இருபாலர் பங்கேற்கலாம்.
பயிற்சி காலம் 40 நாட்கள். பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ் நகல், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினராக இருந்தால் ஜாதி சான்றிதழ் நகலுடன் ஜூன் 30க்குள் நேரில் முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு 86956 46417ல் தொடர்பு கொள்ளலாம்.