/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மோசடி நிதி நிறுவனம் புகார் கூற அழைப்பு மோசடி நிதி நிறுவனம் புகார் கூற அழைப்பு
மோசடி நிதி நிறுவனம் புகார் கூற அழைப்பு
மோசடி நிதி நிறுவனம் புகார் கூற அழைப்பு
மோசடி நிதி நிறுவனம் புகார் கூற அழைப்பு
ADDED : ஜூலை 31, 2024 04:28 AM
மதுரை : மதுரை எல்லீஸ் நகரில் ஜாரா போர்ட்போலியோ மேனேஜ்மென்ட் நிறுவனத்தை முரளிகணேஷ், ராமநாதன் இயக்குநர்களாக இருந்து நடத்தினர். பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி மக்களிடம் பணம் பெற்று மோசடி செய்தனர்.
பாதித்த முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தார். இவ்வழக்கு மதுரை 'டான்பிட்' சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது.
மோசடி நபர்களின் சொத்துக்களை முடக்கி அதன்மூலம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி பாதித்தோரிடம் புகார்களை பெற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதால், இதுவரை புகார் அளிக்காதவர்கள் நேரில் புகார் அளிக்கலாம். விபரங்களுக்கு 0452 - 256 2626.