/உள்ளூர் செய்திகள்/மதுரை/ முன்னாள் அமைச்சர் உதயகுமார் வேண்டுகோள் முன்னாள் அமைச்சர் உதயகுமார் வேண்டுகோள்
முன்னாள் அமைச்சர் உதயகுமார் வேண்டுகோள்
முன்னாள் அமைச்சர் உதயகுமார் வேண்டுகோள்
முன்னாள் அமைச்சர் உதயகுமார் வேண்டுகோள்
ADDED : ஜூன் 15, 2024 06:27 AM
பேரையூர் : 'மதுரை மாவட்ட ஊராட்சிகளுக்கு உடனே 'பாரத் நெட்' இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முன்னாள் அமைச்சர் உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை: அனைத்து மாநிலங்களிலும் ஊராட்சிகளை இணைத்து அரசு சேவையை இணையதளம் வாயிலாக மக்கள் பெற வசதியாக பாரத் நெட் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 ஊராட்சிகள் கண்ணாடி இழை கம்பி வடம் எனும் 'ஆப்டிகல் பைபர்' மூலம் இணைத்து இணையதளம் வழியாக அரசின் சேவை அளிக்கப்பட உள்ளது.
டி. கல்லுப்பட்டி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளுக்கும் கேபிள் கொண்டு செல்லப்பட்டும் இணைப்பு கொடுக்கவில்லை. இதனால் இன்டர்நெட் வசதி பெற பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
இன்டர்நெட் இணைப்பு இல்லாததால் மகளிர் சுய உதவி குழுவுக்காக கட்டப்பட்ட கட்டடங்கள் வீணாக கிடக்கின்றன. டவர் வசதி இல்லாத ஊராட்சிகளில் பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது. ஊராட்சிகளுக்கு உடனடியாக பாரத் நெட் இணைப்பை கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.