Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அ.தி.மு.க.,வை எந்த சக்தியாலும் பலவீனப்படுத்திவிட முடியாது சொல்கிறார் முன்னாள் அமைச்சர் உதயகுமார்

அ.தி.மு.க.,வை எந்த சக்தியாலும் பலவீனப்படுத்திவிட முடியாது சொல்கிறார் முன்னாள் அமைச்சர் உதயகுமார்

அ.தி.மு.க.,வை எந்த சக்தியாலும் பலவீனப்படுத்திவிட முடியாது சொல்கிறார் முன்னாள் அமைச்சர் உதயகுமார்

அ.தி.மு.க.,வை எந்த சக்தியாலும் பலவீனப்படுத்திவிட முடியாது சொல்கிறார் முன்னாள் அமைச்சர் உதயகுமார்

ADDED : ஜூன் 18, 2024 04:59 AM


Google News
மதுரை : 'எம்.ஜி.ஆர்., உருவாக்கிய அ.தி.மு.க.,வை எந்த சக்தியாலும் பலவீனப்படுத்த முடியாது. மக்களும் ஒருபோதும் அ.தி.மு.க.,வை கைவிட மாட்டார்கள்' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது:

'தமிழகத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்காது என்பதால் தான் அ.தி.மு.க., புறக்கணித்துள்ளது' என பொதுச் செயலாளர் பழனிசாமி தெளிவாக கூறிவிட்டார். இந்த தேர்தலால் எந்த மாற்றமும் ஏற்படாது.

மக்கள் சுதந்திரமாக ஓட்டளிப்பதற்கு தி.மு.க., தடையாக உள்ளது. அக்கட்சி தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகளை மீறி செயல்படுகிறது என்ற செய்தி மக்களிடம் செல்லும். நாங்கள் இந்த முடிவை அறிவித்த உடன் எங்கள் கூட்டணில் உள்ள தே.மு.தி.க.,வும் தேர்தலை புறக்கணித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் 2026ல் 200 தொகுதிகளை வெல்வோம் என பேசியிருப்பது அவரது கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தவே உதவும். 2019ல் தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது 33 சதவீதம் ஓட்டுகள் பெற்றிருந்த நிலையில், தற்போது ஆளும் கட்சியாக இருக்கும்போது 26 சதவீதமே பெற்றுள்ளது. ஆனால் அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கி அதிகரித்துள்ளது. வரும் சட்டசபை தேர்லில் அ.தி.மு.க., கூட்டணி பிரமாண்ட வெற்றியை பெறும்.

பழனிசாமியை முதல்வராக ஏற்கும் கட்சிகளை வரவேற்க அ.தி.மு.க., தொண்டர்கள் தயாராக உள்ளனர். 52 ஆண்டுகள் பலம் வாய்ந்த இக்கட்சியை தி.மு.க.,உள்ளிட்ட பல சக்திகள் பலவீனப்படுத்த முயற்சிக்கின்றன. அது ஒருபோதும் நடக்காது.

தமிழக மக்கள் அ.தி.மு.க.,வை கைவிட மாட்டார்கள். சிலர் அழைப்பு விடுத்ததற்கு துணை பொதுச் செயலாளர் முனுசாமி விளக்கம் அளித்துவிட்டார். அதுவே கட்சி கருத்து. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us