ADDED : ஜூலை 10, 2024 04:41 AM
திருப்பரங்குன்றம் : சாமநத்தத்தில் அட்மா திட்டத்தின்கீழ் எள் பயிரில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு திரவ உயிர் உரங்களை மானியத்தில் வழங்கினார். எள் பயிரில் ஒருங்கிணைந்த உர நிர்வாகம் குறித்து ஓய்வுபெற்ற பேராசிரியர் ஞானஅருள் சாமுவேல்ராஜன், அரசின் திட்டங்கள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் விளக்கம் அளித்தார். விதைப்பண்ணை அமைப்பது குறித்து உதவி விதை அலுவலர் அழகேசன் பயிற்சி அளித்தார். 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
எலியார்பத்தியில் நிலக்கடலை விதைப்பண்ணையை இணை இயக்குநர் சுப்புராஜ் ஆய்வு செய்து விவசாயிக்கு தொழில்நுட்ப அறிவுரை வழங்கினார். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் மீனா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் லதா, உதவி மேலாளர்கள் அழகர், மகாலட்சுமி செய்திருந்தனர்.