/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 58 கிராம கால்வாய்க்கு வேலியா மனு கொடுத்த விவசாயிகள் 58 கிராம கால்வாய்க்கு வேலியா மனு கொடுத்த விவசாயிகள்
58 கிராம கால்வாய்க்கு வேலியா மனு கொடுத்த விவசாயிகள்
58 கிராம கால்வாய்க்கு வேலியா மனு கொடுத்த விவசாயிகள்
58 கிராம கால்வாய்க்கு வேலியா மனு கொடுத்த விவசாயிகள்
ADDED : மார் 13, 2025 05:09 AM
மதுரை: உசிலம்பட்டி 58 கிராமக் கால்வாய் இடதுபக்க கிளை வாய்க்காலுக்கு கம்பி வேலி அமைத்து தடுத்துள்ளதை அகற்றக் கோரி கலெக்டர் சங்கீதாவிடமும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் புகார் மனு கொடுத்துள்ளதாக மதுரை மாவட்ட நஞ்சை புஞ்சை விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தலைவர் மணிகண்டன் கூறியதாவது: உசிலம்பட்டி கல்லுாத்து க.பாறைப்பட்டி அருகே உள்ள 58 கிராம கால்வாயின் இடதுபுற கிளை கால்வாயானது எஸ்.அய்யம்பட்டி கடைமடை கண்மாய் வரை செல்கிறது. இதன் மூலம் நல்லச்சான்பட்டி கண்மாய், கல்லுாத்து, கே. பெருமாள் பட்டி, பானாமூப்பன்பட்டி, ரெட்டியபட்டி, அய்யம்பட்டி கண்மாய்கள் சங்கிலித்தொடர் முறையில் தண்ணீர் பெறுகின்றன. இந்த வாய்க்காலானது மகாலிங்கபுரம் அருகே சிலரால் கம்பிவேலியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்யும் போது கம்பிவேலி அடிப்பகுதியில் இலை, தழை குப்பை தேங்கினால் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லாது. நீர்வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும். இதுகுறித்து கலெக்டர், தாசில்தாருக்கு மனு அனுப்பியுள்ளோம் என்றார்.