பருவ மழையை எதிர்நோக்கும் விவசாயிகள்
பருவ மழையை எதிர்நோக்கும் விவசாயிகள்
பருவ மழையை எதிர்நோக்கும் விவசாயிகள்
ADDED : ஜூலை 11, 2024 05:22 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதி விவசாயிகள் ஆடிப்பட்ட சாகுபடிக்காக பருவ மழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
விவசாயிகள் ஆடி 18 அன்று விதைப்பது வழக்கம். கடந்த மாதம் பெய்த மழையால் விவசாயிகள் தங்களது நிலங்களை உழுது விதைப்புக்கு தயார்படுத்தி வைத்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகை யில், ''வைகாசி இறுதியில் காற்று துவங்கி ஆடிவரை நன்கு வீசும். இக்காலங்களில் எவ்வளவு காற்று வீசுகிறதோ அந்த அளவிற்கு பருவ மழை பெய்யும். இந்த ஆண்டு துவக்கத்தில் அதிகளவு காற்று வீசியது. தற்போது மிகக் குறைந்த அளவிலேயே வீசுகிறது. மழை எந்த அளவுக்கு பெய்யும் என்பது சந்தேகமாக உள்ளது.
திருப்பரங்குன்றம் பகுதியில் பெரிய கண்மாய்களான தென்கால், நிலையூர் கண்மாய்களில் மிகவும் குறைவாக தண்ணீர் உள்ளது. போதிய அளவில் பருவ மழை பெய்து, வைகையில் தண்ணீர் திறந்தால் மட்டுமே சாகுபடி பணிகளை துவக்க முடியும். மழை எந்த அளவிற்கு பெய்கிறது என்பதை பொறுத்தே இந்தாண்டு பணிகளை துவக்க உள்ளோம் என்றனர்.