/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கண்மாய், வரத்து கால்வாய்கள் துார்வார விவசாயிகள் கோரிக்கை கண்மாய், வரத்து கால்வாய்கள் துார்வார விவசாயிகள் கோரிக்கை
கண்மாய், வரத்து கால்வாய்கள் துார்வார விவசாயிகள் கோரிக்கை
கண்மாய், வரத்து கால்வாய்கள் துார்வார விவசாயிகள் கோரிக்கை
கண்மாய், வரத்து கால்வாய்கள் துார்வார விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜூன் 04, 2024 06:32 AM
பேரையூர் : விவசாயம் முழுமையாக நடக்க பேரையூர் பகுதியில் உள்ள கண்மாய், வரத்து கால்வாய்களை துார்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேரையூர் தாலுகாவில் 73 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதி முழுவதும் விவசாயம் மட்டுமே முக்கியத் தொழில். அனைத்தும் வானம் பார்த்த பூமி. மழை பெய்து கண்மாய் நிரம்பினால் மட்டுமே விவசாயம் நடக்கும். பெரும்பாலான கண்மாய்கள் துார்வாரவில்லை. ஆழம் இல்லாததால் சிறிய மழை பெய்தாலும் கண்மாய் நிரம்பி விடும். சில கண்மாய்கள் தொடர்மழை பெய்தாலும் நிரம்புவதில்லை. கண்மாய் முழுவதும் முட்புதராக இருப்பதால் மழைநீரை உறிஞ்சி விடுகிறது. கண்மாய்களுக்கு முறையான வரத்துக் கால்வாய் வசதியில்லை. வரத்துக் கால்வாய் இருந்தும் துார்வாரப்படாததால் மழைநீர் கண்மாயில் சேகரமாக வழியில்லை.
மழைநீர் முழுமையாக விவசாயத்திற்கு பயன்பட கண்மாய்களை ஆழப்படுத்தி துார்வார வேண்டும். வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும். பெரும்பான்மையான கண்மாய்களில் முறையான மடைகள் இல்லை. இதனால் மழைநீர் தேங்கினாலும் அதை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியவில்லை. கண்மாயை துார்வாருவதோடு, மடைகள் அமைக்கும் பணியையும் செய்யவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.