/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நாட்டுக்கோழி வளர்க்க விவசாயிகள் ஆர்வம் நாட்டுக்கோழி வளர்க்க விவசாயிகள் ஆர்வம்
நாட்டுக்கோழி வளர்க்க விவசாயிகள் ஆர்வம்
நாட்டுக்கோழி வளர்க்க விவசாயிகள் ஆர்வம்
நாட்டுக்கோழி வளர்க்க விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜூன் 03, 2024 03:22 AM
பேரையூர்: நாட்டுக்கோழி வளர்ப்பில் நல்ல வருவாய் கிடைப்பதால் அவற்றை வளர்க்க பேரையூர் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
பேரையூர் பகுதியில் வாழை, தென்னை உள்ளிட்ட பணப்பயிர்களும், காய்கறி சாகுபடியும் நடக்கிறது. கூடுதல் வருவாய்க்காக கால்நடை, நாட்டுக்கோழி வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். நாட்டுக்கோழி முட்டை மற்றும் கறிக்கு நல்ல கிராக்கி இருப்பதால் உபதொழிலாக இவை வளர்க்கப்படுகின்றன.
கலாவதி கூறுகையில், ''எனது தோட்டத்தில் 30 கோழிகள், 10 சேவல்கள் வளர்க்கிறேன். நாட்டுக் கோழிகள் தோட்டங்களில் தன்னிச்சையாக மேய்ந்து வளரும். அவற்றை கூடுதல் விலை கொடுத்து வாங்க மக்கள் தயாராக உள்ளனர். ஒரு கிலோ ரூ.350 வரை விற்பதால், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. நாட்டுக்கோழி முட்டை ஒன்று ரூ.10 கொடுத்தாலும் கிடைப்பதில்லை என்றார்