/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பூட்டியே கிடக்கும் விதை சேமிப்பு கிடங்கு; விதையும் திறக்கல, வேதனையும் தீரவில்லை விவசாயிகள் விரக்தி பூட்டியே கிடக்கும் விதை சேமிப்பு கிடங்கு; விதையும் திறக்கல, வேதனையும் தீரவில்லை விவசாயிகள் விரக்தி
பூட்டியே கிடக்கும் விதை சேமிப்பு கிடங்கு; விதையும் திறக்கல, வேதனையும் தீரவில்லை விவசாயிகள் விரக்தி
பூட்டியே கிடக்கும் விதை சேமிப்பு கிடங்கு; விதையும் திறக்கல, வேதனையும் தீரவில்லை விவசாயிகள் விரக்தி
பூட்டியே கிடக்கும் விதை சேமிப்பு கிடங்கு; விதையும் திறக்கல, வேதனையும் தீரவில்லை விவசாயிகள் விரக்தி
ADDED : ஜூன் 15, 2024 06:27 AM

கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி விதை சேமிப்பு கிடங்கு 3 மாதங்களாக மூடியே கிடப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
இங்கு வேளாண்துறை சார்பில், விதை கிராம திட்டத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் விதை சேமிப்பு கிடங்கு துவங்கப்பட்டது. 15 ஆண்டுகளாக செயல்படும் இக்கிடங்கில் உழவன் செயலியில் பதிவு செய்த 18 கிராம விவசாயிகள் மானிய விலையில் விதை நெல், உரம், பூச்சி மருந்து, வேளாண் கருவிகள், தென்னங்கன்று, உரச் செடி, சிறுதானிய விதைகள் மற்றும் தென்னை ஊட்டச்சத்துக்கள் வாங்கி செல்கின்றனர். தற்போது இக்கிடங்கு 3 மாதங்களாக செயல்படாமல் பூட்டிக் கிடக்கிறது.
அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு மாவட்டச் செயலாளர் துரைசாமி கூறியதாவது : விதை சேமிப்பு கிடங்கு பூட்டிக் கிடப்பதால் கூடுதல் விலை கொடுத்து தனியாரிடம் வாங்கும் நிலை உள்ளது.
சமீபத்தில் மழை பெய்ததால் கோடை பயிர்கள் சாகுபடி செய்ய உள்ள நிலத்தில் பசுந்தாள் உரச்செடிகளை வளர்த்து, பிறகு அவற்றை மடக்கி உழுத பின்பே பயிரிட முடியும். ஆனால் அதற்கான விதையை வாங்க முடியவில்லை.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, 'ஊழியர்கள் இல்லாததால் விதை சேமிப்பு கிடங்கை திறக்கவில்லை' என்கின்றனர். உடனே ஊழியர்களை நியமித்து தடையின்றி விதைகள் கிடைக்க செய்ய வேண்டும் என்றார்.
இணை இயக்குநர் சுப்புராஜ் கூறுகையில், உடனே ஆட்கள் நியமிக்கப்படும் என்றார்.