/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தமிழகத்தில் சந்தை கட்டணத்தால் விவசாயிகள் பாதிப்பு சேவையே செய்யாமல் வசூலிப்பதா தமிழகத்தில் சந்தை கட்டணத்தால் விவசாயிகள் பாதிப்பு சேவையே செய்யாமல் வசூலிப்பதா
தமிழகத்தில் சந்தை கட்டணத்தால் விவசாயிகள் பாதிப்பு சேவையே செய்யாமல் வசூலிப்பதா
தமிழகத்தில் சந்தை கட்டணத்தால் விவசாயிகள் பாதிப்பு சேவையே செய்யாமல் வசூலிப்பதா
தமிழகத்தில் சந்தை கட்டணத்தால் விவசாயிகள் பாதிப்பு சேவையே செய்யாமல் வசூலிப்பதா
ADDED : ஜூன் 14, 2024 05:19 AM
மதுரை: 'இந்தியா முழுவதும் ஒரே விதமான வேளாண் விளைபொருள் சட்டம் செயல்படுத்தாததால் தமிழகத்தில் மட்டும் சந்தை கட்டணம் வசூலிக்கப்படுவதாக' தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் மதுரையில் தெரிவித்தனர்.
சங்கத்தலைவர் வேல்சங்கர், கவுரவ செயலாளர் சாய் சுப்ரமணியம், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் கூறியதாவது:
வேளாண் விளைபொருள் சட்டம் ஒரே விதமாக இல்லாததால் தமிழக வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் வேளாண் விளைபொருள் சட்டம் நடைமுறையில் இல்லை. இதனால் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் விற்பனைக் கூடத்திற்கு வெளியே சந்தையில் விற்கும் பொருளுக்கும் சந்தைக்கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. கர்நாடகாவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு வெளியே விற்கப்படும் பொருளுக்கு மட்டும் ஒரு சதவீத சந்தைக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சேவை செய்யாமல் கட்டணமா:
தமிழகத்தில் மட்டும் எல்லாவிதத்திலும் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகள் தங்களது விளைபொருளை எந்த இடத்தில் இருந்து எந்த இடத்திற்கும் தடையின்றி கொண்டு செல்லலாம். அதுவே வியாபாரிகள் கொண்டு சென்றால் ஒரு சதவீத சந்தைக்கட்டணம் வசூலிக்கின்றனர். வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் விற்கப்படும் பொருளுக்கு சேவை செய்ததற்காக சந்தைக்கட்டணம் வசூலிப்பது நியாயம். எங்களுக்கு எந்தவித சேவையும், வசதியும் செய்யாமல் வெளி மார்க்கெட்டில் விற்கும் பொருளுக்கும் ஒரு சதவீத சந்தைக்கட்டணம் வசூலிக்கின்றனர்.
இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சென்று கொண்டிருந்த பொருட்கள் கர்நாடகாவில் இருந்து தற்போது செல்வதால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுவதால் மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு வேளாண் விளைபொருள் சட்டத்தின் கீழ் வரும் சந்தைக் கட்டணத்தை ஒரே விதமாக முறைப்படுத்த வேண்டும் என்றனர்.