ADDED : ஜூன் 09, 2024 03:59 AM
வாடிப்பட்டி, : பரவை ஜி.எச்.சி.எல்., பவுண்டேஷன் மற்றும் பெட்கிராட் சார்பில் பரவை, தேனுார், திருவேடகம், திருவாலவாயநல்லுார் கிராமப் பகுதி பெண்களுக்கு ஜூட் பேக், ஆரி எம்பிராய்டரி தயாரிக்க 2 மாதம் பயிற்சி வழங்கினர்.
பெண்கள் தயாரித்த பொருட்கள் கண்காட்சி, விற்பனை துவக்க விழா பரவை மீனாட்சி மில்லில் நடந்தது. முதன்மை நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தலைவர் அசோக்குமார், மூத்த பொது மேலாளர் ராஜகோபால், நிர்வாகிகள் தினேஷ், கவுரவ், முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். சி.எஸ்.ஆர். சசுஜின் வரவேற்றார்.
பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம், தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள் ரூபி, பொதுச்செயலாளர் அங்குசாமி, பயிற்சியாளர்கள் கண்ணன், முத்துச்செல்வி பங்கேற்றனர்.