ADDED : ஜூலை 02, 2024 06:09 AM
மதுரை : மதுரையில் நாடார் மறுமலர்ச்சி சங்க செயற்குழுக் கூட்டம் தலைவர் தாளமுத்துராஜா தலைமையில் நடந்தது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். மாநகராட்சி இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நடைபாதை ஆக்கிரமிப்பு குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வரும் தினமலர் நாளிதழுக்கு மாநில செயலாளர் பாஸ்கரன் பாராட்டு தெரிவித்தார். பொருளாளர் சண்முகவேல், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.