ADDED : ஜூன் 19, 2024 05:30 AM
மதுரை : மதுரை சுப்ரமணியபுரம் பவர் ஹவுஸில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை (ஜூன் 20) காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை மின்குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.
இதில் சுப்ரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்ச்சங்கம், யானைக்கல், டவுன்ஹால், மீனாட்சி அம்மன் கோயில், மாகாளிபட்டி, மகால், ஜான்சிராணி பூங்கா, அரசமரம் பகுதி, தெப்பக்குளம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி பகுதி மின்நுகர்வோர் தங்கள் குறைகளை நேரிலோ, மனுக்கள் மூலமோ தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் பாஸ்கரபாண்டி தெரிவித்துள்ளார்.