ADDED : ஆக 07, 2024 05:24 AM
உசிலம்பட்டி : உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடினர். தலைமை ஆசிரியர் மதன் பிரபு வரவேற்றார்.
வட்டார கல்வி அலுவலர் தேவி தலைமை வகித்தார். கலை நிகழ்ச்சிகள், பேச்சு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் சோபனாஅஜித்பாண்டி, நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பரமசிவம் பரிசு வழங்கினர். ஆசிரியர் சந்தோஷ் நன்றி கூறினார்.