ADDED : ஜூன் 08, 2024 06:02 AM
திருநகர் : மதுரை தனக்கன்குளம் நேதாஜிநகரைச் சேர்ந்தவர் கனிராஜா 31, சரக்கு வேன் டிரைவர்.
இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று கனி ராஜா திருப்பரங்குன்றத்திற்கு டூவீலரில் சென்றார். திருமங்கலம் சென்ற லாரி டூவீலர் மீது மோதியது. சம்பவ இடத்திலேயே கனிராஜா இறந்தார். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.