/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குழாய் சேதத்தால் ஒரு மாதமாக வீணாகும் குடிநீர் குழாய் சேதத்தால் ஒரு மாதமாக வீணாகும் குடிநீர்
குழாய் சேதத்தால் ஒரு மாதமாக வீணாகும் குடிநீர்
குழாய் சேதத்தால் ஒரு மாதமாக வீணாகும் குடிநீர்
குழாய் சேதத்தால் ஒரு மாதமாக வீணாகும் குடிநீர்
ADDED : ஆக 01, 2024 04:56 AM
திருப்பரங்குன்றம்: சோழவந்தான் அருகே பன்னியான் பகுதியில் இருந்து திருப்பரங்குன்றம், பசுமலை பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக பூமிக்கு அடியில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதில் திருநகர் 2 வது பஸ் நிறுத்தம் அருகே பூமிக்கு அடியிலுள்ள குழாய் சேதம் அடைந்து ஒரு மாதத்திற்கும் மேலாக தண்ணீர் மெயின் ரோட்டில் இருந்து வெளியேறி வீணாகிறது.
தொடர்ந்து வெளியேறும் தண்ணீரால் ரோடும் சேதமடைகிறது.
திருப்பரங்குன்றம் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை இருக்கும் சூழலில் தண்ணீர் இப்படி வீணாவது வேதனையளிக்கிறது. சேதமடைந்த குழாயை சீரமைக்க நடவடிக்கை தேவை.