/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தி.மு.க., அரசை கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம் தி.மு.க., அரசை கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
தி.மு.க., அரசை கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
தி.மு.க., அரசை கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
தி.மு.க., அரசை கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 26, 2024 07:10 AM

மதுரை : 'தி.மு.க., அரசுக்கு எதிராக மக்கள் களத்தில் இறங்கி போராடினால் விடியல் கிடைக்கும்' என மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க., தொழிற்சங்க பேரவை செயலாளர் காளிராஜன் பேசினார்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர் வடக்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்தர் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முருகன், பாலன், மணிகண்டன், செயலாளர் கணபதி, மணிமுத்து முன்னிலை வகித்தனர்.
தொழிற்சங்க பேரவை செயலாளர்காளிராஜன் பேசுகையில் ''தேர்தலில் 40க்கு 40 வென்ற தி.மு.க., பத்தே நாட்களில் கள்ளக்குறிச்சியில் 40க்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொடுத்துள்ளது. டாஸ்மாக்கை மூடினால் குடிமகன்கள் இறந்துவிடுவார்கள் என அரசு சொல்கிறது. கொரோனா காலத்தில் மூடியபோது குடிமகன்கள் இறக்கவில்லை.
கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை போலீசுக்கு தெரியாமல் நடப்பதில்லை. தி.மு.க., அரசுக்கு எதிராக போராடினால் மட்டுமே விடியல் கிடைக்கும்'' என்றார்.
நிர்வாகிகள் அழகர்சாமி, பார்த்திபன், பூபதி, அரவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.