திருப்பரங்குன்றம் : மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி தமிழ்த் துறை தமிழ் உயராய்வு மையம் சார்பில் சங்க காலத் திணை வாழ்வியல் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், துணைத் தலைவர் ஜெயராம், உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, பொருளாளர் ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தனர். மாணவி தட்சயபாரதி வரவேற்றார். லேடி டோக் கல்லுாரி தமிழ் உயராய்வு நடுவம் இணை பேராசிரியர் தமயந்தி பேசினார். மாணவி லாவண்யா நன்றி கூறினார். மாணவி அபிநயா தொகுத்துரைத்தார். மைய தலைவர் காயத்ரி தேவி ஒருங்கிணைத்தார்.