ADDED : ஜூலை 27, 2024 06:22 AM
மதுரை : வாடிப்பட்டி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை நபார்டு வங்கி மதுரை கோட்ட மேலாளர் சக்திபாலன், வேளாண் வணிக துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி ஆய்வு செய்தனர்.
துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி கூறியதாவது: இரு நாட்களுக்கு முன் நடந்த மறைமுக தேங்காய் ஏலத்தில் 7 விவசாயிகள், 15 வியாபாரிகள் பங்கேற்றனர். தேங்காய் ஒன்று குறைந்தபட்சம் ரூ.7.65, அதிகபட்சம் ரூ.14.35 வீதம் ரூ.ஒருலட்சத்து 72ஆயிரத்து 480க்கு விற்பனையானது.
12 விவசாயிகளின் 1465 கிலோ கொப்பரை ஏலத்திற்கு 7 வியாபாரிகள் பங்கேற்றனர். குறைந்த பட்சம் கிலோ ரூ.67, அதிகபட்சம் ரூ.92.50 வீதம் ரூ.ஒரு லட்சத்து 15ஆயிரத்து 281 க்கு ஏலம் போனது. விற்பனைக்கு மேற்பார்வையாளரை 94893 13489 ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.